வாசகர் வட்டம் : Vaasagar Vattam
IISc Thamizh Peravaiஇந்திய அறிவியல் கழகத்தில் ‘வாசகர் வட்டம்’ கூட்டம் கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் பெரும்பாலும் செவ்வாய் கிழமை இரவு நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு சிறந்த படைப்பாளிகளின் கதை, கவிதை, கட்டுரை என தமிழின் கலை இலக்கிய கூறுகளை வாசித்து ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அந்த படைப்புகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் தம்மை சுயபகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் பணியை மேற்கொள்கிறோம்.